Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அரச நிறுவன ஊழியர்களுக்கு விடுக்கும் செய்தி!

 


உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை விசேட சோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது.


அரச நிறுவனங்களில் இடம்பெறும் தவறுகளை குறைத்து, பொதுமக்களுக்கு செயல்திறன்மிக்க சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்திம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாளை ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 28 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments