Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அதிமேதகு ஜனாதிபதி கோடபாய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கரு விற்கு அமைவாக , ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதி அபிவிருத்தி

 


 (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


அதிமேதகு ஜனாதிபதி கோடபாய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கரு விற்கு அமைவாக , ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் , கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய கெளரவ நீதியமைச்சரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான கெளரவ அலி சப்ரி அவர்களின் சிபார்சின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளரும் முன்னாள் உயர்கல்வி பரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் புதல்வருமான  றிஸ்லி முஸ்தபா அவர்களின் பெரு முயற்சியால் கல்முனை தொடக்கம் காரைதீவு வரையிலான கடற்கரை வீதிக்கு கார்பெட் இடும் பணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி சந்தியில் றிஸ்லி முஸ்தபா  தலைமையில் இடம்பெறவுள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சு , கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ள படவுள்ள இந்நிகழ்வில் வனஜீவராசிகள் , வன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ.விமலவீர திசாநாயக்க பிரதம அதிதியாகவும் , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டீ.வீரசிங்க , திலக் ராஜபக்ஷ ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் , கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் , காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிறிஸ்ணபிள்ளை ஜயசிறில் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபா வின் பிரத்தியே செயலாளர்  அல் ஜவாஹிர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments