ஏ.எச்.ஏ. ஹுஸைன்கொழும்பு போன்ற பெரு நகரங்களிலேயே காணப்பட்ட போதைப் பொருள் பாவினை கிராமங்களுக்கம் ஊடுருவியிருப்பது ஆபத்தானது இதனையிட்டு கிராம மக்கள் விழிப்பாக இருந்து தங்களையும் எதிர்கால சந்தியினரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேசேன தெரிவித்தார்.
போதைப் பொருள் பாவினை உட்பட சமகால பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் எம்.எஸ் நழீம் தலைமையில் புதன்கிழமை மாலை 17.03.2021 இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் ஏறாவூர் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.கே.ஏ. ஸவாஹிர் ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி ஷாபிறா வஸீம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் மனநல மருத்துவர் டான் சௌந்தரராஜன் ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.ஆர். சியாஹ{ல்ஹக் உட்பட இன்னும்; பல துறைசார்ந்த அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பள்ளிவாசல் பொது நிறுவனங்களினது அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் போதைப் பொருள் வலையில் எதிர்காலத் தலைவர்களான தற்போதைய இளம் சமுதாயத்தினர் குறிப்பாக மாணவர்கள் சிக்க வைக்கப்படுகின்றார்கள். இது மிகவும் ஆபத்தானதும் அழிவைக் கொண்டு வரக் கூடியதுமான செயற்பாடாகும். இதை ஒரு கெட்ட சகுனமாகவே கருதவேண்டியுள்ளது.
எனவே போதைப் பொருள் விநியோக வலைப்பின்னலை தகர்த்தெறிவதில் பொலிஸாருடன் இணைந்து சமூகத்திலுள்ள அத்தனை தரப்பாரும் அக்கறை காட்ட வேண்டும்.
பொலிஸாராகிய நாங்கள் இந்தப் பிரதேசத்திலும் இந்த மாவட்டத்திலும் போதைப் பொருள் விநியோகம் பாவனை ஆகியவற்றை அடியோடு ஒழிப்பதில் அக்கறையாக உள்ளோம்.
எனவே போதைப் பொருள் விநியோகம் மற்றும் பாவனை பற்றி அறிந்து கொள்ளும் எவரும் எந்தவிதத் தயக்கமுமின்றி எமது தொடர்பாலுக்குள் வந்து விடயத்தைத் தெரியப்படுத்த வேண்டும். தகவல் தருபவர் யார் எவர் என்கின்ற விடயங்கள் எமக்குத் தேவைப்படாது. அதனால் தயக்கமின்றி எந்நேரமும் 0652224426 எனும் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தர முன்வாருங்கள். போதைப் பொருள் சம்பந்தமாக நீங்கள் தரப்போகும் தகவல்கள் எதிர்கால சந்ததியினரை வாழவைக்கும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.” என்றார்.
0 Comments