Advertisement

Responsive Advertisement

சமுர்த்திக் குடும்பங்களின் வருமான அதிகரிப்பு வேலைத்திட்டம் அறிவூட்ல் கருத்தரங்கு

 


செ.துஜியந்தன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்திக் குடும்பங்களின் வருமான அதிகரிப்பு வேலைத்திட்டம் தொடர்பாக கிராமிய மட்டக்குழுக்கள் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், மதத்தலைவர்கள் ஆகியோரை அறிவூட்டல் கருத்தரங்கு  பிரதேசசெயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.  

இநநிகழ்வில் கல்முனை சமுர்த்தி மத்திய வலய வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ்.ஹிதாயா, சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம். நஜீப் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.  





இங்கு சமுர்த்திப் பயனாளிகளை தெரிவு செய்யும் போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் மற்றும் புள்ளி வழங்கும் திட்டங்கள் தொடர்பில் விழிப்பூட்டல் நிகழ்வு நடைபெற்றதுடன். கலந்து கொண்டிருந்தவர்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments