Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜெனிவா வாக்கெடுப்பு நெருங்கும் நிலையில் மோடி - கோட்டாபய தொலைபேசியில் பேச்சு

 


இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இன்று பிற்பகல் தொலைபேசியில் பேசினார்.

தொலைபேசி ஊடாக இன்று (13) பிற்பகல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் கலந்துரையாடியுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அபிவிருத்தி பணிகள் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கொவிட் தொற்று காரணமாக எதிர்நோக்கியுள்ளதாக சவால்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் அயல் நாட்டு கொள்கையில், இலங்கைக்கே முக்கியத்தும் வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை ஜெனிவா விவகாரம் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments