Advertisement

Responsive Advertisement

ஏறாவூர் நகர சபைப் பிரிவில் கிராமிய மைதானங்களை முன்னேற்றும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்!!



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிராமிய மைதானங்களை முன்னேற்றுதல் தொடர்பான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர சபைப் பிரிவில் 15 இலட்ச ரூபாய் ஒதுக்கீட்டில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.ஆர். சியாஹல்ஹக் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழீம் ஏறாவூர் 5ஆம் குறிச்சி மணியம் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு இந்த மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தோடு இணைந்ததாக இடம்பெற்றது.

அங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய நகர சபைத் தலைவர் நழீம்,ஏறாவூர் நகர பிரதேசத்தில் உள்ள பிரதான 4 மைதானங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை இருந்தபோதும் கூட ஏறாவூர் நகர சபைப் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த அபிவிருத்தித் திட்டத்தை மறு கேள்விக்கு இடமின்றி தமிழ்ப் பிரதேசமான 5ஆம் குறிச்சி மணியம் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்ய முன்வந்தேன்.

இளஞ்சமூகத்தினர் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க இவ்வாறான விளையாட்டு அபிவிருத்திகள் பெருந்துணை புரியும்.

தமிழ் முஸ்லிம் சமூகங்களும் பேதமின்றி குரோதமின்றி ஒன்றிணைந்து தங்களுக்குபுரிய அபிவிருத்திகளை அடைந்து கொள்ள வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஸ் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளரான அவரது சகோதரர் எஸ். மயூரன் ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர்களான கே. பிரபாகரன் எஸ். சுதாகராசா உட்பட ஏறாவூர் நகர சபையின் கீழ் வரும் தமிழ் கிராமங்களின் பொது மக்களும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments