இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது.
இலங்கையில், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பிலான முறைசாரா ஆலோசனையாக இந்த தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது.
பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகள் உள்ளிட்ட 6 நாடுகளினால் இந்த தீர்மானம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன், இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 19 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளில் 47 நாடுகள் மட்டுமே வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளன.
இதற்கமைய, இலங்கைக்கு இதுவரை 21 நாடுகள் தமது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: