Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் - வைத்திய தம்பதியினர் காயம்..!!

 வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகளின் வீட்டுக்குள்


புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் வைத்தியர்களான கணவனும், மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வவுனியா, வைரவபுளியங்குளம், 6 ஆம் ஓழுங்கையில் உள்ள வைத்தியரின் வீட்டிற்கு இன்று (01.03) அதிகாலை 12.30 மணியளவில் புகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கிக் கொண்டிருந்த வைத்தியர் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் மீது கம்பியினால் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த அவர்கள் இருவரினதும் கைத்தொலைபேசி, பேஸ், மோட்டார் சைக்கிள் திறப்பு, கைக்கடிகாரம், சிசீரீவி வீடியோ சேமிப்பு பெட்டகம் என்பவற்றை எடுத்துச் சென்றுள்ளதுடன் வீட்டில் இருந்த தொலைகாட்சி, சிசீரிவி என்பவற்றையும் அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்னளனர்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த வைத்தியர்களான கணவனும், மனைவியும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments