எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
2020 ம் ஆண்டின் Most Youth Favourite Radio Presenter விருதை வென்றார் சக்திFM வானொலியின் ஆர்.ஜே. மொஹமட் சௌக்கி
IELC மற்றும் youth for human rights international அமைப்பினால் மத்திய மாகாணத்தின் கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இன்று (27) இடம்பெற்ற விருது வழங்கல் விழாவில் சாய்ந்தமருதை சேர்ந்த சக்தி வானொலியில் கடமையாற்றும் முஹம்மத் சௌக்கி 2020 ஆம் ஆண்டுக்கான புகழ்பெற்ற இளைய தலைமுறையினரிற்கான வானொலி தொகுப்பாளரிற்கான விருதை தனதாக்கிக் கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
முஹம்மத் சௌக்கி கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் பல விருதுகளை வென்றவர்.
2014 ம் ஆண்டு கொழும்பு ஆனந்தா கல்லூரியின் சந்தேசிய தேசிய விருதையும் ,2015 ஆம் ஆண்டு கண்டி மஹிந்த கல்லூரியில் இடம்பெற்ற அபிமான விருது வழங்கல் விழாவில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு இரண்டு தேசிய விருதுகளை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments