Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இது சிங்கள பௌத்த நாடு! P2P போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கால்களை உடைத்திருப்பேன் - மேர்வின் சில்வா ஆவேசம்

 


நான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களின் கால்களை உடைத்து விரட்டியிருப்பேன் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது பேசிய அவர்,

“சிங்கள மக்கள் போராட்டம் நடத்தும் போது காலிமுகத்திடலில் வைத்து திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்கள் இவ்வாறு பேரணி செல்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர்.

குறித்த பேரணி இடம்பெற்ற இடத்தில் தான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களை அடித்து விரட்டியிருப்பேன்.

நாட்டில் அனைவரும் ஒரே நீதி இருக்க வேண்டும். சிங்கள மக்கள் இது குறித்து விழிப்புடன் இருங்கள். இதற்கு எதிராக நாங்கள் போராட்டத்தில் குதிப்போம். யார் என்னை தடுக்கின்றார்கள் என்று பார்ப்போம்.

உங்களுக்கு தலைமை வகிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆட்சியில் இருக்கும் ராஜபக்சர்கள் தயவு செய்து முதுகெலும்பு உடைந்தவர்கள் போல் நடந்துகொள்ளாதீர்கள்.

நான் ஒரு தூய சிங்கள பௌத்தன். இது ஒரு சிங்கள பௌத்த நாடு. நாங்கள் புத்தரின் போதனைகளை பின்பற்றுவதால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்க கடமைப்பட்டிருக்கிறோம். எனினும், அவர்கள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றார்.

Post a Comment

0 Comments