Home » » பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் எழுச்சி பேரணி- பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் எழுச்சி பேரணி- பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை!

 


பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்கள், அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில், 3 பொலிஸ் நிலையங்களால் “பி” அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே பேரணிக்கு தடை கோரி ஏ அறிக்கையூடாக பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையங்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, இந்த "பி" அறிக்கைகள் பேரணியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றக் கட்டளைச் சட்டம் 55 (1), 56 2 (ஆ) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த “பி” அறிக்கைகளை பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தனித்தனியே தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று திறந்த மன்றில் அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |