Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் உறுதிப்படுத்தியது பிரிட்டன்

 


ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள 46 வது மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை சமர்ப்பிக்கப்படுமென்பதை பிரிட்டன் உறுதி செய்துள்ளது.

ஜெனிவாவிற்கான பிரிட்டன் தூதுவரும் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுமாகிய ஜூலியன் பிரத்வைட் மனித உரிமை பேரவைக்கு நேற்று திங்கட்கிழமை இதனை அறிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

22ம் திகதி முதல் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வு குறித்த திட்டங்களை உறுதிசெய்வதற்காக மனித உரிமை பேரவையின் கூட்டம் நேற்று இடம்பெற்றவேளை பிரிட்டன் தனது தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளமை உறுதியாகியுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என பிரத்வைட் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்தின் தொடர்ச்சியான தீர்மானமாக இது காணப்படும்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கையை அடிப்படையாக கொண்டதாக புதிய தீர்மானம் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments