செ. துஜியந்தன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் இயங்கும் முன்பள்ளி பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
இதற்கமைய இங்குள்ள முன்பள்ளி பாடசாலைகளுக்கு கை கழுவும் வேசன்கள் மற்றும் தொற்று நீக்கும் திரவங்கள் ஆகியன வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்முனை வடக்க முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் யோகேஸ்வரன் திருப்பதி, சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆர்.நித்தியா உட்பட முன்பள்ளிகளை முன்னின்று நடத்தும் பொறுப்பாசிரியைகள் கலந்து கொண்டனர்.
சிறுவர் செயலகத்தினால் முன்பள்ளிகளை ஆரம்பிக்கம் வகையில் கொரோனா தொற்றில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலான முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கல்முனை வடக்கு பிரதேசத்தில் கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, துறைவந்தியமேடு ஆகிய கிராமங்களில் 27 பாடசாலைகள் இயங்கிவருகின்றன. இப் பாடசாலைகள் யாவும் எதிர்வரம் 15 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருப்பதி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
0 comments: