மட்டக்களப்பு சின்ன ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் செலுத்திய வந்தவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயம் என மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
கல்முனைக்குடி 9 ஆம் பிரிவு வீட்டுத்திட்ட வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய இராசதம்பி முகமட் பசில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த போது ஊறணியில் இருந்து திருப்பெரும்துறையை நோக்கி பிரயாணித்த பக்கோ இயந்திரம் கடக்கும் போது மோட்டர்சைக்கிளும் பக்கோ இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளாதில் மோட்டார் சைக்கில் செலுத்தியவரும் அதில் பின்னிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துனர்.
இதனையடுத்து படுக்காயமடைந்தவர்களை மட்டு போதனவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த 63 வயதுடைய முகமட் பசீல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பக்கோ இயந்திரத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments