Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு இ.போ.ச சாரதிக்கு கொரோனா ; ஊழியர்கள் அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனை..!!

 


மட்டக்களப்பில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவிவில் பணியாற்றும் 75 ஊழியர்களுக்கு நேற்று மாலை விரைவான அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த டிப்போவுடன் இணைக்கப்பட்ட சாரதியொருவர் கொரோனா தொற்றுக்கு சாதகமாக பரிசோதனை மேற்கொண்டதன் பின்னரே டிப்போவின் ஊழியர்கள் மற்றும் சாரதிகளுக்கு அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினால் சுகாதார வைத்தியதிகாரி எஸ்.கிரிசுதன் தலைமையிலான சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது வேறு எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments