Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிப்பு!!

 


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட்கிழமை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை இடித்து அகற்றியதைக் கண்டித்தே திங்கட்கிழமை (11) வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்படடிருந்தது.

பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றுள்ள போதிலும் மாணவர்களின் வருகை குறைந்த நிலையிலே காணப்பட்டன.

களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, மட்டக்களப்பு, காத்தான்குடி, வாழைச்சேனை கொக்கட்டிச்சோலை, உட்பட பல நகரங்களிலும் கடைகள் பூட்டப்பட்டிருந்ததுடன் அனைத்து அலுவலகங்களும் ஸ்தம்பித்துள்ளமையைக் காணக் கூடியதாகவுள்ளது.

Post a Comment

0 Comments