எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலை பிரதேசங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராம சேவகர் பிரிவில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக எழுபத்தெட்டு (78) குடும்பங்கள் இடம் பெயர்ந்து தங்களது உறவினர் நண்பர்களது வீட்டில் வசித்து வருவதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தெரிவித்தார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்ளை கோறளைப்பற்று மத்தி அனர்த்த முகாமைத்தவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அஷ்ரப் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் நேரில் சென்று அவதானித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments