காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களில் செல்லுபடிக் காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
தற்போதுள்ள கொவிட்-19 நிலைமைக்கு மத்தியில் சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க இயலாமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்படும் என்று போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பையும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
0 Comments