Home » » யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது- மாணவர்களின் உண்ணாவிரத போராட்டமும் நிறைவு பெற்றது!!

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது- மாணவர்களின் உண்ணாவிரத போராட்டமும் நிறைவு பெற்றது!!

 


யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, யாழ். பல்கலைக்கழக தூணைவேந்தர் தலைமையில் மாணவர்களின் பங்குபற்றலோடு இன்று காலை இடம்பெற்றது.


பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு சென்ற துணைவேந்தர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உறுதிமொழி வழங்கினார்.

யாழ் பல்கலைகழக துணைவேந்தரின் உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

உண்ணாவிரப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுக்கு துணைவேந்தர் முள்ளிவாய்கால் கஞ்சி கொடுத்து அவர்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட்டிருந்த முள்ளிவாய்க்கால் பேரவல நினைவிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்து மாணவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் மற்றும் ஆர்வலர்களும் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் எதிர்ப்பு போராட்டத்தையும், அதன் பின்னர் இரு நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், இன்றையதினம் காலை மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு வந்தநிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்புக்கு எதிராக கண்டனத்தை வெளியிடும் நோக்கில் இன்றையதினம் வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |