Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பல இடங்கள் வெள்ளநீரில் மூழ்கியது- வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் மாநகர சபை...!!

 


மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மட்டக்களப்பின் பல இடங்கள் வெள்ளநீரில் மூழ்கி காணப்படுகின்றன.


இதன் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல இடங்கள் இன்று வெள்ளநீரால் நிரம்பி காணப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெள்ள நீர் நிரம்பி காணப்பட்ட இடங்களை இன்று மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு வெள்ளநீர் வழிந்தோட செய்ய வேண்டிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


குறிப்பாக நாவற்குடா, நொச்சுமுனை, கல்லடி போன்ற மிகவும் வெள்ளநீர் தேங்கிய இடங்களில் இருந்து வெள்ள நீரினை வெளியேற்ற தற்காலிக வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் வெள்ளநீர் தேங்கியுள்ள பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டனர்.



குறித்த வெள்ளநீர் வழிந்தோடச் செய்யும் நடவடிக்கைகளை மாநகர முதல்வர் முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர ஆணையாளர் பா.தயாபரன் மாநகர சபை உறுப்பினர்கள், திட்டமிடல் அதிகாரிகள், மாநகர பணியாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டு உரிய நடவடிக்கைகளை பார்வையிட்டதுடன், ஆலோசனைகளையும் வழங்கினர்.



இதன் பொது கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் குறித்த பிரதேசங்களில் உரிய முறைகளில் திட்டமிட்டு வடிகாலமைப்புகள் செய்யப்படவில்லை என்றும், குடியேற்றங்கள் மழைநீர் தேங்கி நிற்கின்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குடியேற்றங்களை அமைக்கும்போது உரிய நீர்மட்டம் பார்த்து திட்டமிடல்களுடன் அமைக்கப்படவேண்டும் என்றும், மக்கள் இதனை அறிந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டதுடன் தற்போது மாநகர சபையின் முழுமையான வளங்களை பயன்படுத்தி இயலுமானவரை வெள்ளநீர் வழிந்தோடக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments