Home » » விமல் வீரவன்ச போன்ற கீழ்மட்ட அரசியல்வாதிகள் அரசின் ஆட்சி பீடத்தில் இருப்பது இலங்கையின் சாபக்கேடு !

விமல் வீரவன்ச போன்ற கீழ்மட்ட அரசியல்வாதிகள் அரசின் ஆட்சி பீடத்தில் இருப்பது இலங்கையின் சாபக்கேடு !

 


நூருல் ஹுதா உமர்

இலங்கை அரசியலில் ஆசாத்சாலி, ஹிஸ்புல்லாஹ், றிசாட் பதியுதீன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்களின் இல்லை யென்றுறிருந்தால் விமல் வீரவன்ஸ என்ற பாத்திரம் இலங்கை அரசியலில் தோற்றம் பெற்றிருக்காது என கல்முனை மாநகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகருமான பீ .எம். ஷிபான் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்,

1997ம் ஆண்டு கொழும்பு மாநகரசபைக்கு உறுப்பினராக விமல் வீரவன்ச சென்றது முதல் ஆரம்பமானது ஆசாத்சாலி - விமல் வீரவன்ஸ பகை. ஆசாத்சாலியை பழிதீர்த்துக்கொள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்   சமூகத்தை குறிவைத்துள்ளார் விமல் வீரவன்ச கொழும்பு மாநகரசபையின் வரையறைகளை மீறி ஆடை அணிந்து சென்ற விமல் வீரவன்சவுக்கு ஆடை பற்றிய நடைமுறைகளை அன்று ஆசாத்சாலி சொல்லிக்கொடுத்ததன் வெளிப்பாடு, இன்று அது அழிக்க முடியா பொறாமை உணர்வோடு பகையாக நோக்கப்படுகிறது.

சிறுபான்மை அரசியல் தலைவர்கள் எப்போது ஒரு கருத்தைச் சொல்வார்கள்? என்று காத்திருந்து அதற்கு மாற்றீடாக இனவாத கருத்துக்களைத் திணிப்பதில் விமல் வீரவன்ச புகழ் பெற்றிருக்கிறார். சிறுபான்மையினரின் உரிமைக்குரலின் வெளிப்பாடுகள் ஆரம்பிக்கின்ற போது வைக்கோல் பட்டறையில் படுக்கும் உயிரினமாக தன்னை அடையாளம் காட்டி சிங்கள சமூகத்தின் மத்தியில் பொய்யான கருத்துரைகளை விதைப்பதில் விமல் வீரவன்ச வல்லவர்.

சிறுபான்மை தலைவர்கள் பேசவில்லை என்றால் விமல் வீரவன்ச பேசுவதற்கு எந்த கருத்தாடலும் இருக்காது என்று சொல்லும் அளவுக்கு விடையவறுமை உள்ளவர் அவர். க.பொ.த உயர்தரக் கல்வித்தகைமை கூட இல்லாத விமல் வீரவன்ச இந்த அரசில் சுகாதாரம், பாதுகாப்பு துறை அமைச்சுக்களில் வித்தகர் போன்று ஊடகங்களில் கருத்துக்களை கருத்துக்களைத் திணிப்பது ஆசியாவின் ஆச்சரியங்களில் ஒன்றாகும்.

மகர சிறைச்சாலையில் கைதிகள் சுடப்பட்ட போது முந்திக் கொண்டு கருத்துச் சொல்லி மூக்குடைபட்ட தும் இவர்தான். அன்றைய நல்லாட்சியில் இலங்கை இந்திய உறவு பாலமாக "1900" அம்புலன்ஸ் வசதிகளை சுகாதாரத் துறைக்கு இந்தியா உதவ முன்வந்த போது, குழப்பம் விளைவித்து "றோ அதிகாரிகள் உளவு பார்க்க  வருகிறார்கள், இந்தியாவுக்கு இல்லாத அம்புலன்ஸ் சேவைகளை இலங்கை எவ்வாறு அவர்கள் கொடுப்பது "  என்று பொய்யான கட்டுக்கதைகளை மக்கள் மத்தியில் திணித்து அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை கொடுத்தவரும் இவர்தான்.

ஆனால் இன்று "1900" அம்புலன்ஸ் சேவைகள் மக்கள் மத்தியில் பிரசித்தம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. ஆகவேதான் விமல் வீரவன்சவின் கதையை கேட்டிருந்தால் இன்று விரைந்து செயற்படும் இந்தியாவின் "1900" அம்புலன்ஸ் சேவை கூட  இருந்திருக்காது. இதிலிருந்து விமல் வீரவன்ச கூறுவது அப்பட்டமான பொய் என்று மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

இது போன்றே ஜனாஸாக்களை அடக்கம் செய்யவேண்டுமா ? அல்லது எரிக்க வேண்டுமா? என்ற விடயத்தில் விமல் வீரவன்ச அண்டப்புளுகுவதனை சிங்கள சமூகம் உணர்ந்து கொள்ள அம்புலன்ஸ் விடயம் ஒரு சான்றாகும். இலங்கையினுடைய சாபக்கேடு இவ்வாறான படிக்காத கீழ்மட்ட அரசியல்வாதிகள் அரசின் ஆட்சி பீடத்தில் இருப்பதே என்றார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |