Home » » மட்டக்களப்பில் மீண்டும் பரவலான மழை பெய்து வருகின்றது...!!

மட்டக்களப்பில் மீண்டும் பரவலான மழை பெய்து வருகின்றது...!!

 


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது மீண்டும் அவப்போது மழை பெய்து வருகின்ற இந்நிலையில் மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் நவகிரிக்குளத்தின் 2 வான்கதவுகள் ஒரு அடி உயரத்தில் சனிக்கிழமை திறந்து விடப்பட்டுள்ளதாகவும் தற்போது அக்குளத்தின் நீர்மட்டம் 30அடி 9 இஞ்சி கொள்ளளவில் உள்ளதாகவும் நவகிரிக் குளத்தின் நீர்ப்பாசனப் பொறியியலாளர் முருகேசு பத்மதாஸன் தெரிவித்தார்.

இந்நிலையில் தாழ்நிலப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நிற்பதனால் நுளம்புப் பெருக்கமும் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் சனிக்கிழமை காலை 8.30 மணிவரையில் 3.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், 11.30 மணிவரைக்கும் 4.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |