பொலன்னறுவை – கல்லேல்ல பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற ஐந்து கைதிகளில் மற்றுமொரு கைதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருவாரத்தின் பின் இவர் புத்தளம் – ஆராய்ச்சிகட்டு பகுதியில் மறைந்திருந்த நிலையில் இன்று கைதாகியிருக்கின்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லேல்ல சிகிச்சை நிலையத்திலிருந்து கடந்த வாரத்தில் கைதிகளான 5 கொரோனா நோயாளர்கள் தப்பிச்சென்றிருந்தனர்.
இவ்வாறு தப்பியோடியவர்களில் ஒருவர் சிலாபத்தில் வைத்து ஏற்கனவே கைதாகி இருந்தார். இந்நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 3 பேர் தலைமறைவாகியுள்ளனர்
0 Comments