Home » » இலங்கையில் முதல் கொரோனா தடுப்பூசி யாருக்கு போடப்படும் தெரியுமா? வெளிவந்த புதிய தகவல்

இலங்கையில் முதல் கொரோனா தடுப்பூசி யாருக்கு போடப்படும் தெரியுமா? வெளிவந்த புதிய தகவல்

 


நாட்டிற்கு கொண்டுவரப்படும் தடுப்பூசிகளை, சுகாதார பிரிவினருக்கும், பல்வேறு நோய் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ள வயோதிபர்களுக்கும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் இடங்களில் பணியாற்றுவோருக்கும் முதற்கட்டமாக வழங்க எதிர்பார்த்துள்ளதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.

அவசர நிலைமைகளின் போது பயன்படுத்த முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை மாத்திரமே, நாட்டிற்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொவிட் தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வருகின்றமை தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துவதற்கான இடவசதிகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |