Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுதல் தொடர்பான அறிவிப்பு வெளியானது

 


முதலாம் தரத்திற்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இந்த மாதம் 11ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான பின்னணியில், முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வை, அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

Post a Comment

0 Comments