Home » » அனைத்து மாணவிகளுக்காகவும் அரசாங்கம் எடுத்துள்ள விசேட திட்டம்! விளக்கமளிக்க தயாராகின்றார் பிரதமர் மஹிந்த

அனைத்து மாணவிகளுக்காகவும் அரசாங்கம் எடுத்துள்ள விசேட திட்டம்! விளக்கமளிக்க தயாராகின்றார் பிரதமர் மஹிந்த

 


இலங்கை முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆறு மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களில் படிக்கும் 12 மில்லியனுக்கும் அதிகமான பெண் பிள்ளைகள் மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் காரணமாக அவர்களின் கல்வி நடவடிக்கைகளும் தடைபட்டு வருவதைக் காண முடிந்தது.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 65 சதவீதம் பேர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு சுகாதார நாப்கின்களைப் பயன்படுத்துவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.பள்ளி குழந்தைகளுக்கு அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க சுகாதார நாப்கின்களைப் இலவசமாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இது தொடர்பில் நாளை (04) அமைச்சரவையில் விளக்கமளிக்க உள்னர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |