க.பொ.த உயர்தரத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மேலும் 800 மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்க பல்கலைக்கழக் மானியங்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பு மருத்துவம், பல்,பொறியியல், முகாமைத்துவம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கானதாகும்.
மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மானியங்கள் ஆணைக்குழு துணைவேந்தர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது. ஒப்பந்தத்தின் படி, அந்தந்த பீடங்களில் சேர்க்கப்படவுள்ள புதிய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் துணைவேந்தர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
மாணவர்களின் அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் நிதி அதிகரிப்பு குறித்து கலந்துரையாட அனைத்து துணைவேந்தர்களும் பெப்ரவரி மாத தொடக்கத்தில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். மானிய ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு தொடர்பில் திறைசேரியுடன் ஆணைக்குழு கலந்துரையாடியுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மேலும் ஆயிரத்து ஐநூறு மாணவர்களை சேர்க்க மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் பழைய மற்றும் புதிய என இரண்டு பாடத்திட்டங்களின் கீழ் தேர்வு நடத்தப்பட்டதால், இசட் மதிப்பெண்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இசட்-ஸ்கோர் முறையால் தங்களுக்கு நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் கூறி பெற்றோர்களும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும் போராட்டத்தை நடத்தியிருந்தனர். அதற்கேற்ப மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மானியங்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது
0 Comments