Advertisement

Responsive Advertisement

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார் கோட்டாபய

 


கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட் 19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கிராமத்துடான சுமுகமான கலந்துரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் ஏழாவது கட்டம் இன்று வலலாவிட்ட மண்டாகல கிராமத்தில் இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்பர்ட் எஸ்ட்ரா செனக்கா என்ற தடுப்பூசியே இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக 500,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த மருந்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments