Advertisement

Responsive Advertisement

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொவிட் 19 தொற்று !

 


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொவிட் 19 தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.


உடனடி என்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மேற்கொள்ளப்பட்டுள்ள பிசிஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரையில் அவர் சுயதனிமையில் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அவ்வாறான சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌவிடம்  தொடர்பு கொண்டு வினவிய போது, அவ்வாறான சம்பவம் எதுவும் இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில அதில் ஒருவர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments