Home » » மட்டக்களப்பு வேத்துச்சேனைக் கிராமம் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது!!!

மட்டக்களப்பு வேத்துச்சேனைக் கிராமம் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது!!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் மக்கள் பொரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிராமங்களின் உள்வீதிகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள வேத்துச்சேனைக் கிராமம் மழைவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளநீர் கிராமத்திற்குள் முற்றாக புகுந்துள்ளதுடன், அக்கிராமத்திலுள்ள பொரும்பாலான வீடுகளுக்குள்ளும் உட்பகுந்தள்ளதாக அக்கிராம மக்கள் கலலை தெரிவிக்கின்றனர். 

மழை வெள்ளம் வீடுகளுக்குள் உட்பகுந்ததனால் தமது உடமைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கிராமத்தில் மாம் மேற்கொண்டிருந்த மேட்டுநிலப் பயிற்செய்கை உள்ளிட்ட விவசாயச் செய்கைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும், வேத்துச்சேனைக் கிராம மக்கள் அங்கலாய்கின்றனர்.

வேத்துச்சேனைக் கிராமத்திற்குச் செல்லும் தரைவழிப்போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதனால் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அம்மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

இதனால் வேத்துச்சேனைக் கிராமத்திலுள்ள 89 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்க அக்கிராம மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதை வெள்ளத்தினூடாக நடந்து சென்ற அப்பகுதி கிராம சேவை உத்தியோகஸ்த்தர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மிகவும் தெய்வாதீனமாக மரக்கிளை ஒன்றைப் பிடித்து, ஒருவாறு, உயிர்பிழைத்துள்ளார். 

இதனால் அக்கிராம சேவை உத்தியோகஸ்தரின் பெறுமதிமிக்க கையடக்கத் இரண்டு தொலைபேசிகள், வங்கி அட்டைகள், டயரி, கைபேசி, உள்ளிட்ட பொறுமதிமிக்க ஆவணங்களை வெள்ளநீர் அடித்துச் செல்லப்பட்டள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

எனினும் தற்போது இயந்திரப்படகு மூலம் வெள்ளத்தினால் தனிமைப் படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள, வேத்துச்சேனைக் கிராம மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |