Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு- களுதாவளை கடலில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவரைக் காணவில்லை...!!


 மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்ட களுதாவளைக் கடலில் நீராடிய இளைஞர் ஒருவரைக் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று வியாழக்கிழமை(07) மதிய உணவருந்திவிட்டு தமது வீட்டிலிருந்து நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்ற களுதாவளை மத்தி பிரிவைச் சேர்ந்த 16 வயதுடைய கணேசன் பிதுர்னன் என்பவர் வியாழக்கிழமை இரவு வரைக்கும் வீடு வந்து சேரவில்லையாதலால் பெற்றோர் தேடியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை(08) காலை வரைக்கும் தனது பிள்ளை கிடைக்காதவிடத்து களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இவ்விடையம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் குறித்த இளைஞனுடன் இன்னும் பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து களுதாவளைக் கடலில் வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் நீராடியுள்ளனர்.

இதன்போது தம்முடன் நீடாடிய நண்பர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக காணாமல்போன இளைஞனின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் காணாமல்போன இளைஞளைப் பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் இவ்விடயம் தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments