Home » » சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை வேறு பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் வியாபாரங்களில் ஈடுபடவும் தடை

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை வேறு பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் வியாபாரங்களில் ஈடுபடவும் தடை

 


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அவ்வாறு பின்பற்ற தவறுகையில் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வேறு பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் குறித்த பகுதிகளில் மறு அறிவித்தல் வரை வியாபாரங்களில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.

பிரதேச சபையின் தவிசாளர் மேலும் இவ்விடையம் குறித்து ஞாயிற்றுக்கிழமை (03) மேலும் குறிப்பிடுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் 19 தொற்று அதிகரித்து வருகின்றது. 

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டமும் ஒரு சில இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொவிட் 19 தொற்று குறித்த பிரதேசத்தில் இருக்கின்ற மக்களுக்கு பராவாமல் தவிர்ப்பதற்கு இறுக்கமான நடைமுறைகளை இங்குள்ள மக்கள் பின்பற்ற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

இதனைக்கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும், சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை செவிமடுத்து அந்நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும், கொவிட் 19 தொற்று அதிகமுள்ள பிரதேசங்களுக்கு செல்வதையும், பிற மாவட்டங்களுக்கு செல்வதனையும் தவிர்க்க வேண்டும். 

அவ்வாறு கொவிட் 19தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு சென்று வருகின்றவர்கள் தொடர்பில் சுகாதார துறையினருக்கு தகவல்களை வழங்குமாறும், தேவையற்ற விதத்தில் ஒன்றுகூடல், வெளியில் செல்லல், பொது இடங்களுக்கு செல்லல் போன்றவற்றை தவிர்க்குமாறும் சபையின் தவிசாளர் மக்களிடம் வேண்டிக் கொண்டுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |