பொதுமக்கள் கொதித்தாறிய நீரைப்பருகுமாறு சுகாதாரப்பிரிவு வேண்டுகோள்
செ.துஜியந்தன்
கிழக்கில் பெய்துவரும் கடும் மழையினால் தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பலர் இடம்பெயர்ந்துள்ளனர். பின்தங்கிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து மார்க்கங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மழை வெள்ளத்தினால் பல்வேறு தொற்று நோய்கள் உருவாகக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொதுமக்கள் அனைவரும் இக் காலப்பகுதியில் நீரினால் உண்டாகக்கூடிய தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கொதித்தாறிய நீரைப்பருகுமாறும் கல்முனை வடக்கு சுகாதாரப்பிரிவினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
மழை நீர் தேங்கி நிற்பதினால் சேற்றுப்புழுக்களினால் காலில் தோல் அரிப்பு நோய்க்குள்ளாகின்றனர். அத்துடன் வயிற்றோட்டம், வாந்தி, மஞ்சஞ்காமலை, தடிமல், காய்ச்சல் போன்றவற்றாலும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் கூடியளவு கொதித்தாறிய நீரைப்பருகுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
மழைகாலங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்கண்டு அவற்றை துப்பரவு செய்து விழிப்புடன் செயற்படுமாறும் சுகாதாரப்பிரிவினர் கேட்டுள்ளனர். தற்போது கிழக்கில் கொரோனாவும், வெள்ளமும் பொதுமக்களை மேலும் மேலும் துன்பத்திற்குள்ளாக்கிவருவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments: