செ.துஜியந்தன்
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(22) அதிபர் எஸ்.கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் வி.இராஜேந்திரன், ஆரம்ப பிரிவு பொறுப்பாசிரியை திருமதி புனிதகுமார் நிர்மலா உட்பட ஆரம்ப பிரிவு ஆசிரியைகள், ஆரம்ப பிரிவு மாணவர்கள் ஆpயோர் கலந்து கொண்டனர்.
கிழக்கின் ஒளி இணையம் அமைப்பினால் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பொருளாதாரரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு புத்தகப்பை, அப்பியாசக் கொப்பிகள் அடங்கிய ,இக் கற்றல் உகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments: