விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடாக தமது உறவினர்களுடன் உரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைகளுக்கு வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே தற்போது குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே குறிப்பிட்டுள்ளார்.
0 comments: