ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பத்து ஆண்டுகளாக சட்டவிரோத நீர் இணைப்புப் பெற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த காவல் நிலையத்திற்கு இவ்வளவு காலமும் சட்டவிரோதமாக தண்ணீர் கிடைத்திருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கான நீர் வழங்கல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோமகம காவல் நிலையத்தின் சட்டவிரோத நீர் வழங்கல் இணைப்பு தொடர்பாக ரத்மலானவில் உள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சிறப்பு புலனாய்வு பிரிவிற்குக் கிடைத்த தகவலையடுத்தே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டவிரோத செயற்பாட்டினால் சுமார் ரூ .1.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது
0 comments: