முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் எட்டாவது போட்டியில் Jaffna Stallions அணி 54 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் kandy tuskers ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற Jaffna Stallions அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய Jaffna Stallions அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
Jaffna Stallions அணி சார்பில் அதன் தலைவர் திஸ்ஸர பெரேரா அபாரமாக துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 68 ஓட்டங்களையும். Dhananjaya de Silva 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதேவேளை. 186 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய kandy tuskers அணி 17. 1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது .
இந்த நிலையில். Jaffna Stallions அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று. புள்ளி பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது.
0 comments: