பிரித்தானியாவில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி 13 ஆயிரத்து 430 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் 603 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பிரித்தானியாவில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே பிரித்தானியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் இலகுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மதுபான சாலைகள் உணவகங்கள் களியாட்ட விடுதிகள் என்பன விடுமுறை நாட்களில் திறக்கப்படமாட்டாது என பிரித்தானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
0 comments: