மோட்டார் வாகன திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகளை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்றும் வகையில் தபால் திணைக்களத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வாகனமொன்றைப் பதிவு செய்யும் போது வழங்கப்படும் வாகனப் பதிவுச் சான்றிதழ், வாகன இலக்கத் தகடு, ஸ்டிக்கர் மற்றும் புதிய சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை வழங்கும் நடவடிக்கைக்காக தபால் திணைக்களத்தின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
குறித்த ஆவணங்களை பெற்றுக் கொள்ள சேவை பெறுநர்கள் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகின்றமை குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதன் காரணமாக குறித்த ஆவணங்களை தபால் திணைக்களத்தின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்படும் விரைவுத் தபால் சேவையின் மூலம் சேவை பெறுநர்களின் வீடுகளுக்கே விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சேவையை வழங்குவதற்காக தபால் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுவதற்கு போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: