Home » » இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 350 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 24,882 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் 487 பேர் பூரண குணமடைந்ததை அடுத்து இலங்கையில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,304 பேராக அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் மேலும் 6,456 பேரே தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |