Home » » பதவி விலகப்போவதாக அலி சப்ரி ஜனாதிபதியிடம் கோரிக்கை?? ஊடகம் தகவல்

பதவி விலகப்போவதாக அலி சப்ரி ஜனாதிபதியிடம் கோரிக்கை?? ஊடகம் தகவல்

 


அழுத்தங்கள் காரணமாக நீதியமைச்சர் அலிசப்ரி தனது பதவியிலிருந்து விலகப்போவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

எனினும் இதன் உண்மைத்தன்மை இன்னும் வெளியாகவில்லை.

இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக அலிசப்ரி இந்த முடிவெடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.அண்மையில், கொரோனா வைரஸின் விளைவாக நீதி அமைச்சரின் உறவினர் ஒருவர் இறந்துவிட்ட போதும் அவரின் உடலை தகனம் செய்வதற்கு பதிலாக இரண்டாவது பீ.சி.ஆர் சோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இரண்டாவது பீ.சி.ஆர் பரிசோதனையில் நோயாளி வைரஸ் பாதிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டு அது தகனம் செய்யப்படுவதற்கு மாறாக அடக்கம் செய்யப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹேஷா விதானகே குற்றம் சாட்டியுள்ளார்.

இது, தமது உறவினருக்காக நீதி அமைச்சர் சட்டத்தை வளைத்துள்ளமையை காட்டுகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தநிலையில் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, சட்டத்தை வளைக்கவில்லை என்றும், தனிப்பட்ட இலாபத்திற்காக ஒரு போதும் செய்யப்போவதில்லை என்றும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்கள் இருந்தால் தனது அமைச்சுப் பதவியையும், நாடாளுமன்ற பதவியையும் விட்டு விலகத்தயார் என்றும் அலிசப்ரி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |