அபுதாபி - கார் பந்தயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் முன்னாள் உலக சம்பியன் கிமி ரெய்க்கோனன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
அபுதாபியில் தற்போது பார்முலா ஒன் கார் பந்தயங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 41 வயதான கிமி ரெய்கோனன் காரை அசுர வேகத்தில் ஓட்டிச் சென்ற போது காரின் பின்பக்கத்தில் திடீரென தீப்பிடித்தது.
இதனைக் கண்ட கிமி ரெய்கோனன் சாமர்த்தியமாக பந்தயப் பாதையிலிருந்து விலகி காரினை பக்கமாக ஓட்டிச் சென்று நிறுத்தினார். பின் கொழுந்து விட்டு எரிந்த காரிலிருந்து பாதுகாப்பாக வெளியேறி உயிர் தப்பினார்.
இவேவேளை, சில வாரங்களுக்குப் முன்பு இடம்பெற்ற பயங்கர தீ விபத்திலிருந்து ரொமெய்ன் க்ரொஸ்ஜீன் என்பவர் உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: