Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு கல்லடி பொதுச்சந்தை பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனை !


 (லியோன்)

மட்டக்களப்பு கல்லடி பொதுச்சந்தை பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடி, நாவற்குடா ஆகிய பொதுசுகாதார பிரிவுகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகள், வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களில் தனிமை படுத்தப்பட்டவர்களுக்கான ரபிட் அன்டிஜன் டெஸ்ட் மூலமான பரிசோதனைகள் மட்டக்களப்பு கல்லடி பொதுச்சந்தை பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தலைமையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண் உயிரியல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் வைதேகி ரஜீவன் பிரான்சிஸ் மற்றும் வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுசுகாதார பரிசோதகர்கள் இணைந்து ரபிட் அன்டிஜன் டெஸ்ட் மூலமான பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன .

ரபிட் அன்டிஜன் டெஸ்ட் மூலம் 95 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிடைக்கப்பெற்ற அறிக்கைக்கு அமைய எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments