Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பண்டிகைக் காலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை!!

 


பண்டிகைக்காலத்தின் போது தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி கொண்டாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கமைய பெருமளவான பொது மக்கள் ஒன்றுகூடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் சமூக ஊடகங்கள் ஊடாகவும் கண்காணிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களாக புத்திசாலித்தனமாக சிலர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இவ்வாறு கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறியதாகவே கருதப்படுவார்கள் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கொண்டாட்டங்களை நடாத்துவதாக கண்டறியப்பட்டால் குறித்த ஹோட்டல் அல்லது உணவகத்தின் உரிமம் இடைநிறுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பண்டிகைக்காலத்தில் கொண்டாட்டங்களை நடாத்தும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை சோதனைக்குட்படுத்துவதற்கு அவசியம் ஏற்படுமானால் பாதுகாப்பு படையின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments