Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

 


இலங்கையின் பாடசாலைகள் அனைத்தும் 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு நிறைவடையும் போது, அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு வகுப்பேற்றப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

இதன்படி 2021 ஆம் ஆண்டு முதலாம் தவணையின்போது, மாணவர்கள் வகுப்பேற்றப்பட்ட வகுப்பில் கல்வி கற்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு அமைவாக பாடப்புத்தகங்களை இந்த ஆண்டு முடிவடைவதற்குள், அனைத்து மாணவர்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாகாணங்களின் பிரதான செயலாளர்களுக்கும் மாகாண கல்வி செயலாளர்களுக்கும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் கல்வி அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments