Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின : வெள்ளத்தில் வீச்சு வலையுடன் மீன்பிடிக்கும் மீனவர்கள்.


நூருல் ஹுதா உமர்  


கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக அம்பாறை, மாவட்டத்தின் சில பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தாழ் நிலப் பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச வயல் நிலங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள சூழ்நிலையில் அண்மையில் உள்ள நீர்நிலைகளில் மீனவர்கள் வீச்சு வலையுடன் காலை மற்றும் மாலை வேளைகளில் மீன்பிடித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.




விவசாய நிலங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி அப்பிரதேசம் மிகப்பெரும் சமுத்திரம் போன்று கட்சியளிப்பதாக அப்பிரதேசத்திலுள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இருந்தாலும் ஆற்றுமீன்களின் வருகை அதிகமாக இருப்பதனால் மீன்கள் அதிகமாக வலையில் சிக்கிக்கொள்வதாக மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிடுகின்றனர்.

Post a Comment

0 Comments