கொரோனா தொற்றுநோய் காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள சிறுவர்களை வீட்டின் ஓரத்தில் விளையாட அனுமதிப்பது முக்கியம். இது குறித்து பெற்றோர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட தொற்றுநோய்கள் வரும் அபாயம் உள்ளது என்று கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக வீட்டில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து உள்ளதா என்று கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
"கொரோனா தொற்றுநோயால் மேற்கு உட்பட நாட்டின் சில பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவில்லை. இந்த சூழ்நிலை காரணமாக இன்று பல சிறுவர்கள் வீட்டில் உள்ளனர். அவர்கள் எங்கும் செல்ல வழி இல்லை.
எனவே நான் பெற்றோரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். உங்கள் பிள்ளை வீட்டுக்குள் சிக்கிக்கொள்ளாமல், வீட்டின் ஓரத்தில் அல்லது தோட்டத்தில் விளையாடட்டும். காலையில் குறைந்தது 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தைப் பெறுங்கள். இல்லையெனில் குழந்தைகள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படகூடும்.
குழந்தைகள் நீரிழிவு, உடல் பருமன் மற்றும் கொழுப்பு போன்ற தொற்றா நோய்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 comments: