மட்டக்களப்பு மாநகர சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களாக ஏற்கனவே பதவியிலிருந்த ஐவர் பதிவியிலிருந்து விலகி மீண்டும் சுழற்சி முறையில் புதிய ஐவர் மாநகர சபை உறுப்பினர்களாக நியமனம்.
அதன்படி இன்று திருவாளர் ஜோச் பிள்ளை, திருமதி சசிதரன் மேரி க்ரிஷ்டினா, திரு சிவராசா சுபராஜ், திருமதி Y. சாரதா, திரு M. குமார் ஆகிய ஐவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் சுழற்சி முறை அங்கத்தவர்களாக எதிர்வரும் காலப்பகுதிக்கான உறுப்பினர்களாக கடமையாற்றுவதற்கு இன்றிலிருந்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
குறித்த ஐவரும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பதிவிப்பிரமாணம் செய்து தமது உத்தியோகபூர்வ கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இவர்கள் கட்சியின் பதில் செயலாளர் ஜெயராஜ், மாவட்ட அபிவிருத்தி குழுவின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டுமாவட்ட அபிவிருத்தி குழு தலைவரினது செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர், ஆசிரியர் K.K.அரஸ் ஆகியோருடன் இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் திரு தயாபரன் அவர்கள் முன்னிலையில் தங்களது பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
0 Comments