Home » » மட்டக்களப்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தினத்தையொட்டி உருவச்சிலை திறந்து வைப்பு!!

மட்டக்களப்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தினத்தையொட்டி உருவச்சிலை திறந்து வைப்பு!!


மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது அகவையினை முன்னிட்டு மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்தியில் அவரின் உருவச்சிலை பாடுமீன் அரிமா (லயன்ஸ்) கழகத்தின் ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திரைநீக்கம் செய்து சிலையினைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவான், வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் திருமதி.கே.வன்னியசிங்கம், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல். கே. விஜயசேகர, பாடுமீன் அரிமா கழகத்தலைவர் ஆர.எம். றுஸ்வின் உட்பட அரிமா கழகத்தின் உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இதன்போது கலாநிதி புலோரனஸ் பாரதி கென்னடி எழுதிய “முண்டாசுக்கவியின் பாப்பாப் பாடலில் முகாமைக் கருத்துக்கள்” எனும் சிறப்பு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதல்பிரதி நூலாசிரியரால் அரசாங்க அதிபர் கருணாகரனுக்கு வழங்கி வைப்பட்டது.
இதுதவிர பாரதியார் பற்றிய சிறப்புரை மற்றம் அதிதிகளின் விசேட உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |