கண்டி நகரில் தற்காலிகமாக கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.
புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக 12ஆம் திகதி வரையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது
0 Comments